மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தெலங்கானாவில் மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு
மஞ்சள் வாரிய தலைமையகம் திறப்பு
மஞ்சள் வாரிய தலைமையகம் திறப்புபடம்| அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பதிவு
Published on
Updated on
1 min read

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.

தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரிய தலைமையகத்தை திறந்துவைத்த அமித் ஷா, 2030-ஆம் ஆண்டுக்குள் மஞ்சள் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவதாக பேசினார்.

தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஞ்சளின்  மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், மஞ்சள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் மஞ்சள் வாரியம் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Turmeric Board inaugurated by Amit Shah today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com