உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Constable shot dead by govt school teacher in UP village
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த காவலர் அஜய் குமார் (32), ஞாயிற்றுக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு வெளியே நடந்து சென்றார். அப்போது, ​​சஹாரன்பூரில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் உள்ளூர்வாசி மோஹித் ஆர்யாவைச் சந்தித்துள்ளார்.

முதலில் ஒரு கிரிக்கெட் போட்டி தொடர்பாகவும், பின்னர் வாட்ஸ்அப் அரட்டை தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே, ​​காவலரை ஆசிரியர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. உடனே குடும்ப உறுப்பினர்கள் அஜய் குமாரை மீட்டு சிகிச்சைக்காக சோனிபட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறந்தவர் சஹாரன்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்ததாகவும், விடுப்பில் கிராமத்திற்கு வந்ததாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்.பி. சிங் தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Summary

A police constable here has been allegedly shot dead by a government teacher, who is absconding since the incident, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com