பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru woman found dead in garbage truck.
பெண்ணின் சடலம் இருந்த குப்பை லாரி.
Published on
Updated on
1 min read

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) குப்பை லாரியின் பின்புற லிப்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் சுமார் 25-30 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது. அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று இரவு, குப்பை சேகரிக்கும் லாரிக்குள் ஒரு சடலம் இருப்பதைக் கண்டோம். அதிகாலை 1 முதல் 3 மணிக்குள், யாரோ ஒரு பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்தி, பையில் அடைத்து லாரியில் வீசினர்,” என்று கூறினார்.

“கழுத்துடன் அவரது கால்கள் கட்டப்பட்டு சடலம் ஒரு பையில் அடைக்கப்பட்டு, குப்பை லாரியில் வீசப்பட்டது. பிபிஎம்பி குப்பை லாரி ஓட்டுனர் அதைக் கவனித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில், நாங்கள் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு 12:30 மணி முதல் 12:40 மணி வரை ஆகிய இடைப்பட்ட நேரத்தில் சடலத்தை லாரியில் வீச வந்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Summary

The dead body of a woman was found in the back of a garbage truck near a skating rink in Bengaluru on Saturday night. Preliminary investigation suggests that the woman may have been sexually assaulted before being murdered.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com