ஜார்க்கண்டில் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஜார்க்கண்டை புரட்டிப்போட்ட கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
ஜார்க்கண்டில் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்டின் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் பெரும்பாலான பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜாம்ஷெட்பூரில் கார்கை மற்றும் சுபர்ணரேகா போன்ற ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கி அபாய அளவை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

கார்யை ஆறு நிரம்பியதால் ஆதித்யாபூர் பாலத்தில் 129 மீட்டர் அளவை தாண்டி 130.65 மீட்டர் உயரத்தில் வெள்ளநீர் பாய்ந்துள்ளது. இதனால் மக்கள் பாலத்தில் செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர்.

அதே நேரத்தில் சுபர்ணரேகாவின் நீர்மட்டம் 121.50 மீட்டர் அபாய அளவிற்கு எதிராக 121.60 மீட்டராகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கிழக்கு சிங்பூமில் உள்ள பஹரகோரா தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் ஜேஎம்எம் செய்தித் தொடர்பாளருமான குணால் சாரங்கி கூறுகையில்,

பஹரகோராவில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பத்பூர், சக்ரா மற்றும் டோம்ஜுடி பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். தண்ணீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு மாவட்ட நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார்.

சாரங்கி, மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள், தார்ப்பாய் உள்ளிட்டவை வழங்கினார்.

கிழக்கு சிங்பூம் மற்றும் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகங்கள், கார்கை மற்றும் சுபர்ணரேகா நதிகளில் நீர் மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய தனியார் உறைவிடப் பள்ளியில் சிக்கிய 162 மாணவர்களைத் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையால் நேற்று மீட்கப்பட்டது.

ஜூலை 1 வரை ஜார்க்கண்டின் சில பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SUMMARY

Normal life in Jharkhand's Kolhan region was badly affected on Monday due to water-logging in various areas triggered by heavy rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com