ஓமனில் எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

இந்தியாவில் இருந்து ஓமன் நோக்கிச் சென்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...
விபத்துக்குள்ளான கப்பல்
விபத்துக்குள்ளான கப்பல்Indian Navy
Published on
Updated on
1 min read

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி, எம்டி யி செங் 6 என்ற கப்பல் சென்றுகொண்டிருந்தது.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள் Indian Navy

இந்த நிலையில், அந்த கப்பலின் என்ஜின் அறையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

ஐஎன்எஸ் தபாரின் இந்திய கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக ஹெலிகாப்டர் மற்றும் சிறியரக கப்பல்களும் சென்றன.

இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்தியில், அந்த கப்பலில் 14 இந்திய வம்சாவளி மாலுமிகள் இருப்பதாகவும், தீயின் தீவிரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Indian Navy personnel are engaged in rescue operations after a fire broke out on an oil tanker heading towards Oman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com