கேரள மாநில காவல்துறை தலைவராக ரவாடா சந்திரசேகர் நியமனம்

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Ravada Chandrasekhar
ரவாடா சந்திரசேகர்
Published on
Updated on
1 min read

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா ஏ சந்திரசேகரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய காவல்துறை தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹேப் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்த பொறுப்புக்கு ரவாடா சந்திரசேகர் வரவுள்ளார்.

மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் எம்பேனல்மென்ட் குழு வழங்கிய மூத்த அதிகாரிகளின் இறுதிப் பட்டியலில் இருந்து சந்திரசேகர், அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சந்திரசேகர் தற்போது மத்தியப் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Kerala government decided to appoint senior IPS officer Ravada A Chandrasekhar as the new police chief of the state, the Chief Minister's Office said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com