கட்டாக்கில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள்!

 train derailed
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் கட்டாக்கில் சரக்கு ரயிலின் மூன்று காலிப் பெட்டிகள் திங்கள்கிழமை திடீரென தடம்புரண்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. காலை 8.30 மணியளவில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.

இதனால் யார்டில் உள்ள லூப் லைன் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனே நிவாரண ரயில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. யார்டில் உள்ள லூப் லைன் விரைவில் சீரமைக்கப்படும்.

பிரதான பாதை (பத்ரக்-கட்டாக்கில்-விசாகப்பட்டினம்) தெளிவாகவும் செயல்பாட்டுடனும் உள்ளது. பிரதீப்பை நோக்கி ரயில் இயக்கமும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Summary

Three empty wagons of a goods train on Monday derailed in a yard near Cuttack railway station in Odisha, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com