
தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோல்சா சினிமாவுக்கு எதிரே உள்ள ஆக்சிஸ் வங்கியில் இன்று காலை 9:25 மணிக்கு இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10:10 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது, வங்கியின் உள்ள ஏர்-கண்டிஷனர், மரச்சாமன்கள் மற்றும் ஆவணங்களில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கியில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்த காரணங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.