
பிரதமர் நரேந்திர மோடி ரலமான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் புனித மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக நம்பப்படுவதால், இந்த மாதத்தில் இஸ்லாமியர்களால் 30 நாள்கள் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
30 வது நாளில் வானில் பிறை தெரிந்த அடுத்தநாள் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
செளதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று முன் தினம் முதல் பிறை தெரிந்ததால் ரமலான் நோன்பு தொடங்கியது.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (மார்ச் 1) பிறை தெரிந்ததைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஆசிர்வாதங்கள் நிறைந்த ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. ரமலான் நோன்பு நமக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரட்டும். இந்தப் புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?