ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: ஒருவர் கைது

ஹரியாணாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராகுலுடன் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால்,
ராகுலுடன் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால்,
Published on
Updated on
1 min read

ஹரியாணாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமையன்று ரோஹ்தக்கில் ஹிமானி நர்வாலின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன்பிறகு ஹரியாணா காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் இவ்வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

ஹரியாணா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளோம், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

இதனிடடையே கொலையாளிகள் கைது செய்யப்படும் வரை நர்வாலின் உடலை தகனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

நர்வால் ரோஹ்தக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் பங்கேற்றார்.

ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக்கில் செய்தியாளர்களிடம் பேசிய நர்வாலின் தாயார் சவிதா, என் மகள் கொலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒருவர் சம்பந்தப்பட்டிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

ராகுல் காந்தியுடனான என் மகளின் யாத்திரைக்குப் பின்னர் அவள் மேல் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டது.

இளம் வயதில் கட்சியில் அவளின் வளர்ச்சி அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளது உடலை தகனம் செய்ய மாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com