ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..
சுற்றுலாப் பயணிகள் (கோப்புப் படம்)
சுற்றுலாப் பயணிகள் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில், ஜம்மு பகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பஞ்சாபில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் கணித்துள்ளது.

ஐம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண் போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. இதனால் பள்ளத்தாக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மாறிவரும் வானிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர், பலர் குல்மார்க் போன்ற பிரபல இடங்களுக்குச் சென்று பனிப்பொழிவைக் கண்டு மகிழ்ந்தனர்.

இந்தாண்டு யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏழு நாள்களில் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் மக்களிடையே வறட்சி ஏற்படும் அச்சத்தைத் தணித்துள்ளது. ஆறுகள், ஓடைகள், ஏரிகள், நீரூற்றுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 50 நாள்கள் நீடித்த வறட்சி காரணமாக வறண்டு கிடந்த சில வற்றாத நீரூற்றுகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

'சில்லாய் கலன்' என்று அழைக்கப்படும் 40 நாள் நீண்ட கடுமையான குளிர்காலக் காலத்தில் ஏற்படும் இந்த பனிப்பொழிவுதான் மலைகளில் உள்ள வற்றாத நீர் தேக்கங்களை நிரப்புகிறது. பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்குக் குடிப்பதற்கு உள்பட ஏராளமான தண்ணீரை வழங்குகிறது.

மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தனது அனுபவத்தைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். நாங்கள் காஷ்மீரின் குளிரை அனுபவிக்க வந்துள்ளோம். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. குல்மார்க்கில் பனிப்பொழிவைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்தது, இது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. நாங்கள் இரண்டு நாள்கள் அங்கேயே தங்கியிருந்ததாக அவர் கூறினார். அனைவரும் நிச்சயமாக வர வேண்டிய ஓர் இடம் என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் குளிர்ந்த காலநிலையை மக்கள் அதிகம் விரும்புவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. படகு சவாரிகள், உள்ளூர் உணவு வகைகள் மற்றும் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி, ஸ்ரீநகரில் 4.9 டிகிரி செல்சியஸ், குல்மார்க் -4.3 டிகிரி, பஹல்காம் -0.8 என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜம்மு நகரில் 12.4 டிகிரி செல்சியஸ், கத்ரா நகரில் 7.8 டிகிரி, படோட் 4.7, பனிஹால் 3.6 மற்றும் பதேர்வா 3.4 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com