இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்கா தகவல்!

மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி குறித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதியை நடப்பாண்டில் இந்தியா அதிகரிக்கும் என அமெரிக்க அரசின் விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் விவசாயத்துறை மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மாட்டிறைச்சி உற்பத்தி கடந்த 2024 ஆம் ஆண்டில் 45.7 லட்சம் டன்களாக இருந்தது. இது இந்தாண்டு 46.4 லட்சம் டன்களாக உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஏற்றுமதி 15.6 லட்சம் டன்களில் இருந்து 16.4 லட்சம் டன்களாக உயருமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ல் உலகிலேயே அதிகமாக இந்தியாவில் 30 கோடியே 75 லட்சம் மாடுகளும், எருமைகளும் கால்நடைகளாக வளர்க்கப்படுகின்றன.

இதில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2024-ல் 4.09 கோடியில் இருந்தது. இது இந்தாண்டு 4.14 கோடியாக அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மாட்டிறைச்சி நுகர்வு 30 லட்சம் டன்களில் இருந்து 36 லட்சம் டன்களாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புரதத்தின் அளவில் ஒப்பிடுகையில் மற்ற உணவுகளை விட மாட்டிறைச்சி மலிவாகக் கிடைப்பதால் உள்நாட்டு நுகர்வு வரும் காலங்களில் அதிகரிக்கும்.

இந்திய அரசின் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் சார்பில் இறைச்சிக் கடைகள் அமைக்கவும், நவீனப்படுத்தவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், தேசிய கால்நடை இயக்கம் மூலம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது.

இந்தத் திட்டங்கள் விலங்குகளின் சுகாதாரம், இனப்பெருக்கம், தீவனம் வழங்குதல், தீவன உற்பத்தி, பால் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்திய அரசு உயிருடன் விலங்குகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மாட்டிறைச்சி ஏற்றுமதி, உள்நாட்டு நுகர்வின் தேவை அதிகரிப்பதால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும்.

தென்கிழக்கு ஆசிய சந்தையான இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தேவை குறையுமென்றும் எகிப்து, மத்திய கிழக்கு நாடுகளான துபை, சௌதி அரேபியா, ஈராக், உஸ்பெகிஸ்தான், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி சார்ந்த பொருள்களை இறக்குமதி செய்வதற்கான கொள்கைகள் இந்தியாவில் இல்லை. ஆனால், விலங்குகளின் மரபணுக்களை இறக்குமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com