சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்துக்கள் பற்றி..
தொழிற்சாலை
தொழிற்சாலை
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் லக்கன் லால் தேவாங்கன் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சரண் தாஸ் மஹந்தின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனவரி 1, 2024 முதல் இந்தாண்டு ஜனவரி 31 வரை தொழிற்சாலை அலகுகளில் இதுவரை 171 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 124 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் 86 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துகளில் இறந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ.17,23,68,454 இழப்பீடு வழங்கப்பட்டது. காயமடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.60,32,342 உதவி வழங்கப்பட்டது என்று அமைச்சர் பதிலில் தெரிவித்தார்.

இதுபோன்ற விபத்துகளில் இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் மறுவாழ்வுக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com