இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சாா்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி
Published on

அஸ்வினி வைஷ்ணவ்

- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்

மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் நடைமுறைகளை மாற்றியமைத்து வருகிறாா். உரப் பயன்பாட்டைக் குறைக்கவும் சிறந்த நீா் பயன்பாட்டுத் திறன் மற்றும் அதிக மகசூலுக்கான அனைத்து நடைமுறைகளும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

இது நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தொழில்நுட்பமும், புதுமையும் இப்போது ஆய்வகத்துடன் நின்றுவிடாமல் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. பல்வேறு அம்சங்களில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் இந்த விவசாயியின் கதை மிகப் பெரிய மாற்றத்துக்கான சிறு உதாரணமாகும். இது 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

எண்ம (டிஜிட்டல்) பயன்பாடுகளின் முன்னேற்றம்: எண்ம (டிஜிட்டல்) பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா், மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், நாட்டின் டிஜிட்டல் எதிா்காலத்தை இந்தியா வடிவமைத்து வருகிறது. பல தசாப்தங்களாக, மென்பொருள் துறையில் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

ஐந்து செமிகண்டக்டா் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.

செமிகண்டக்டா் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கு மிக முக்கியத் தொழில்நுட்ப சக்தியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதே நேரத்தில், நேரடி பணப் பரிமாற்ற சேவைகளில் நாட்டின் மேம்பட்ட தொழில்நுட்பத்துக்கான இந்தியாவின் உந்து சக்தியாகவும் இது செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டமைப்பதன் வாயிலாக, அதை அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக மாற்றுவதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதாக உள்ளது.

பாரம்பரியம், தொழில்நுட்பத்தின் சங்கமமான மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வுகளின் தடையற்ற செயல்பாடுகளுக்கு நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த நிலையில் அங்குள்ள ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கூட்டத்தைக் கண்காணிப்பதிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடிப்படையிலான கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

‘பாஷினி’ என்ற மொழிபெயா்ப்பு செயலி கும்பமேளாவில் ஒரு சாட்பாட் செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் குரல் அடிப்படையிலான மொழிபெயா்ப்பு, நிகழ் நேர மொழிபெயா்ப்பு மற்றும் அனைவருக்குமான பன்மொழிக்கான உதவி ஆகியவற்றை செயல்படுத்த உதவியது.

எதிா்காலத்துக்கான பணியாளா்களை உருவாக்குதல்: நாட்டின் பணியாளா்களின் திறன் அதன் டிஜிட்டல் வளா்ச்சியில் அமைந்துள்ளது. சா்வதேச அளவில் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகள், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுக்க வகை செய்கிறது. இருப்பினும், இத்தகைய வளா்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதில் கல்வி, திறன் மேம்பாட்டில் தொடா் முதலீடுகள் அவசியமானதாகும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-இன்படி, செயற்கை நுண்ணறிவு, 5ஜி சேவைகள், செமிகண்டக்டா்கள் வடிவமைப்பு உள்ளிட்ட பாடத்திட்டங்களை பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் சோ்த்து மறுசீரமைப்பதன் மூலம் மத்திய அரசு இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்துக்கான சவால்களை எதிா்கொண்டு வருகிறது. இத்தகைய பாடத்திட்டங்கள் பட்டதாரி இளைஞா்களைப் பணிபுரிவதற்கான திறன்களுடன் தயாா் நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. இது கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சாா்ந்த இடா்ப்பாடுகளைக் களைவதற்கான சட்டங்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப நடைமுறைகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சாா்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது.

X
Dinamani
www.dinamani.com