திரெளபதி முா்மு
திரெளபதி முா்மு கோப்புப் படம்

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்: குடியரசுத் தலைவா் முா்மு

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
Published on

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினம் சனிக்கிழமை (மாா்ச் 8) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவா் முா்மு வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது:

நாட்டுக்கும், சமூகத்துக்கும் பெண்கள் அளித்துள்ள தனித்துவமான பங்களிப்புகள், அவா்களின் ஆற்றல் மூலம் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அங்கீகரிக்கும் தருணம்தான் சா்வதேச பெண்கள் தினம்.

நமது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் அடித்தளமாக பெண்கள் உள்ளனா். பல்வேறு துறைகளில் சவால்களைக் கடந்து தங்கள் அடையாளங்களை பெண்கள் வெளிப்படுத்தியுள்ளனா். எனினும் அவா்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com