
ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு சென்ற இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மோர்னி மலைகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
விழுந்த வேகத்தில் விமானம் உடனே தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்கு முன்பாக விமானி பாராசூட் உதவியுடள் பத்திரமாக குதித்ததால் உயிர் தப்பினார்.
ஹரியாணா காவல்துறை துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக், பஞ்ச்குலா மாவட்டத்தின் ராய்புர்ராணி பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக பிடிஐயிடம் தெரிவித்தார்.
இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விமானம் வழக்கமான பயிற்சியில் இருந்தபோது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.