அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அழைப்பாணை!

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அழைப்பாணை!

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
Published on

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய 340-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்து, ஜலந்தர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டங்கி பாதை என்ற பெயரில் ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற டங்கி முகவர்கள் உதவுகின்றனர். சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் அமெரிக்காவில் நுழைய மாணவர் விசா, போலி திருமணங்கள் மூலம் டங்கி பாதை உதவுகிறது.

இந்த டங்கி முகவர்கள் மீது காவல் நிலையத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில், பஞ்சாபைச் சேர்ந்த பயண முகவர்கள் மீது மட்டும் 3,225 முதல் தகவல் அறிக்கைகளும், 1,100-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் சேகரித்த முதற்கட்ட தகவல்களின்படி, இவ்வாறான டங்கி பாதை பயண முகவர்களுக்கு சட்டவிரோதமாகக் குடியேற விரும்பியவர்கள் ரூ. 44 கோடிக்குமேல் செலுத்தப்பட்டதாக தெரிவித்தன. டங்கி பாதை வழியாக அமெரிக்காவை அடைய ஒரு நபர் சராசரியாக ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம்வரை கொடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com