
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.55 செலுத்தினால், அவர்களது ஓய்வு வயதை எட்டியபிறகு மாத ஓய்வூதியமாக ரூ.3,000 பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில்தான் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களது ஓய்வுக்காலத்தில், குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் திட்டம்.
இந்த திட்டம் தற்போது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இதில், சாலையோர வியாபாரிகள், தினக்கூலிகள், தொழிலாளிகள் என எந்தவிதமான பணப்பாதுகாப்பும் இல்லாத தொழில்களில் இருப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு, ஒரு தொழிலாளி மாதம் ரூ.55 செலுத்தி வர வேண்டும். பிறகு அவர்கள் ஓய்வு வயதை அடையும்போது, அவர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
குப்பை பொறுக்குவோர், சலவைத் தொழில், ரிக்சா ஓட்டுபவர்கள், தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்வோர், கட்டடத் தொழிலாளர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த திட்டத்தின் கீழ், ஒருவர் ரூ.200 மாதந்தோறும் செலுத்தி வந்தால், ஓய்வூதியத் தொகையில் அவர்களது தொகை வைப்பு வைக்கப்பட்டுவிடும்.
இதையும் படிக்க.. சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!
இதன்படி, ஒரு தொழிலாளர் தனது 18 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் குறைந்தபட்ச தொகையான ரூ.55 செலுத்தலாம். ஒருவேளை 29 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். இப்படி வயதுக்கு ஏற்ப மாதத் தவணை அதிகரிக்கும். இந்த திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செலுத்திய தொகை மற்றும் ஆண்டுக்கு ஏற்ப இவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது ஜன் தன் வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து இந்த திட்டத்தில் இணைய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.