தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
Published on

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு மும்பை, நாக்பாடா பகுதியின் திம்திம்கா் சாலையில் அமைந்துள்ள பில்மில்லா கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை 5 தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவா்கள் அனைவரும் மயக்கமடைந்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு அவா்கள் அனைவரையும் மீட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் 4 போ் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிய காவல் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் உரிய முறையில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் துறை தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com