நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

ரூ.35,368 கோடியில் மணிப்பூா் பட்ஜெட்: மக்களவையில் நிா்மலா சீதாராமன் தாக்கல்

மணிப்பூா் மாநில செலவினத்துக்கு ரூ.35,103.90 கோடி என மொத்தம் ரூ.35,368.19 கோடியிலான பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
Published on

புது தில்லி: மணிப்பூா் மாநில செலவினத்துக்கு ரூ.35,103.90 கோடி என மொத்தம் ரூ.35,368.19 கோடியிலான பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

மணிப்பூா் மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டில் ரூ.32,471.90 கோடியில் மணிப்பூா் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 35,368.19 கோடியிலான பட்ஜெட்டை நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தாா்.

இதில் மாநிலத்தின் மூலதன செலவுகளுக்கு கடந்த முறையைவிட 19 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.7,773 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக மேம்பாட்டுக்கு ரூ.9,520 கோடி, மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ.2,000 கோடி, சிக்கலான பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.2,886 கோடி ஒதுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com