நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சில்லறை பணவீக்கம் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

நுகர்வோர் வாங்கும் சில்லறைப் பொருட்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் விகிதமே சில்லறை பணவீக்கம் எனப்படுகிறது.

இம்முறை அன்றாட தேவைகளான காய்கறி, இறைச்சி, மீன், பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளதால், சில்லறை பணவீக்கம் சரிந்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 2024 ஜனவரியில் 4.26 சதவீதமாகவும், பிப்ரவரியில் 5.09 சதவீதமாகவும் இருந்தது.

2024 நவம்பருக்குப் பிறகு நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கி அறிவித்த வரம்புக்குள் நீடித்து வருகிறது. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2 - 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

2025 ஜனவரியை ஒப்பிடும்போது பிப்ரவரி உணவுப் பணவீக்கத்தில் 222 புள்ளிகள் சரிந்தது. 2023 மே மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இந்த அளவுக்கு உணவுப் பணவீக்கம் சரிவை சந்தித்துள்ளது.

ஓராண்டிலிருந்து மற்றொரு ஆண்டு வரை கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கத்தில் குறிப்பாக இஞ்சி (-35.81%), சீரகம் (-28.77%), தக்காளி (-28.51%), காலிஃபிளவர் (-21.19%), பூண்டு ((-20.32%) குறைந்த விலையில் இருந்தன.

மாறாக தேங்காய் எண்ணெய் (54.48%), தேங்காய் (41.61%), தங்கம் (35.56%), வெள்ளி (30.89%), வெங்காயம் (30.42%) விலை உயர்ந்து காணப்பட்டன.

நகர்ப்புற பணவீக்கம் ஜனவரியில் 3.87% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில் 3.32% ஆக குறைந்துள்ளது. இதேபோன்று நகர்ப்புற உணவு பணவீக்கத்தில் 5.53 சதவீதத்தில் இருந்து 3.20 சதவீதமாக சரிந்துள்ளது.

இதேபோன்று கிராமப் பகுதிகளில் ஜனவரியில் 4.59% ஆக இருந்த உணவு பணவீக்கம் பிப்ரவரியில் 3.79% ஆகக் குறைந்துள்ளது.

குறைந்த பணவீக்கம் கொண்ட மாநிலமாக தெலங்கானா (1.13%) உள்ளது. அதிக பணவீக்கம் கொண்ட மாநிலமாக கேரளம் (7.31%) உள்ளது.

இதையும் படிக்க | டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com