
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்ளிரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்தனர்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் அவர் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாள்கள் ஜகதீப் தன்கர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜகதீப் தன்கரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.