
மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மோரீஷஸை இந்தியாவின் முக்கியக் கூட்டாளி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கடல்சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வர்த்தகம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்க 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR - Security and Growth for All in the Region) உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி அறிவித்தார். செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கும் வகையில் மோரீஷஸுடன் மேம்பட்ட மூலோபாய கூட்டாண்மை குறித்தும் இந்த ஒப்பந்தத்தின்போது ஆலோசிக்கப்பட்டன.
இந்த அரசுமுறை பயணத்தின்போது, கும்பமேளாவில் சேகரிக்கப்பட்ட கங்கை தீா்த்தம் உள்ளிட்ட பரிசுகளை மோரீஷஸ் அதிபர் தரம்வீா் கோகுலுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி ஆர்டர் ஆப் தி கிராண்ட் கமாண்டர் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி, மோரீஷஸ் நாட்டினர் கௌரவிக்கவுள்ளனர். மேலும், 21 ஆவது சர்வதேச விருதைப் பெறுவதுடன், இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.