சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பேசியபோது, “ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறக்கப்பட்டுள்ளன. பலரது பங்களிப்புகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்ட ஆசாத் கா அம்ரித் மகோத்சவம் மூலம் நமக்காக உயிர்த்தியாகம் செய்த பல வீரர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.
அவர்களின் தியாகங்கள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும், “இதுதவிர, விமானப் பயணங்களின்போது விமானங்களில் முக்கிய நாள்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார்.
ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் என்பது இந்திய அரசால் 75 ஆண்டுகள் சுதந்திரத்தைக் கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு வரலாறு, கலாச்சாரம், சாதனைகள் குறித்து நினைவுகூற கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.