
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா குறித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை விமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது.
உலகெங்கிலும் இருந்து வந்த துறவிகள், சாதுக்கள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என கடந்த 45 நாள்களில் 66 கோடிக்கும் அதிகமானோா் சங்கமத்தில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் இன்று கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
முன்னதாக, நிகழ்ச்சி நிறைவடைந்தபோது கும்பமேளா பற்றி பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்துள்ளது. பல்லாண்டு கால அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு தேசத்தின் உணா்வு எழும்போது, பிரயாக்ராஜில் நாம் கண்டது போன்ற கும்பமேளா காட்சிகள் வெளிப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.