தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி என முதல்வர் ரேகா முதல்வர் பேரவையில் அறிவித்துள்ளார்.
தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500
Published on
Updated on
1 min read

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி என முதல்வர் ரேகா முதல்வர் பேரவையில் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் பேரவையில் இன்று(மார்ச் 25) தாக்கல் செய்யப்படுகிறது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. முதல்வர் ரேகா குப்தா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன்படி, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 31.5% அதிகமாகும் என்றும் கூறினார். மேலும் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முந்தைய அரசு தில்லி வளர்ச்சியில் தோல்வியடைந்துள்ளது. யமுனை அசுத்தமாக இருந்தது. சாலை சேதமடைந்து இருந்தது காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது, தில்லி நிர்வாகம் நஷ்டத்தில் இருந்தது. இத்தகைய அரசை நடத்துவது சவாலானததான்

ஆனால் பாஜக அரசு, உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர், மின்சாரம் மற்றும் சாலை மேம்பாடு உள்ளிட்ட 10 முக்கிய துறைகளை மையமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் ரூ. 15,000 கோடியாக இருந்த மூலதனச் செலவு இந்த ஆண்டு ரூ. 28,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 5,100 கோடி, இதன் மூலமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக தில்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமெராக்கள் பொருத்தப்படும்.

பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துக்கு ரூ. 2144 கோடி

100 அடல் கேன்டீன்கள் நிறுவ ரூ. 100 ஒதுக்கீடு

போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு" என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com