
நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக இன்று (மார்ச் 26) மாலை 7 மணி முதல் யுபிஐ செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளதாக பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுபிஐ பணப்பரிமாற்றத்தை பல்வேறு செயலிகளின் வாயிலாக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் யுபிஐ சேவை பாதிப்பு குறித்து டவுன்டிடக்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''யுபிஐ சேவையைப் பயன்படுத்த முடியவில்லை என கூகுள் பே-யிலிருந்து 296 புகார்கள் வந்துள்ளன. பேடிஎம் பயனர்களிடம் இருந்து 119 புகார்களும், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியில் இருந்தும் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியவில்லை என 376 புகார்களும் வந்துள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளது.
சமூக வலைதளப் பக்கங்களிலும் பல்வேறு பயனர்கள் யுபிஐ சேவையை ஜி பே, போன் பே போன்றவற்றில் பயன்படுத்த முடியவில்லை எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சிலருக்கு மட்டும்தானா? அல்லது யாருக்கும் செயல்படவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒருவர், ''வாழ்க்கையில் முதல்முறையாக யுபிஐ சேவை முடங்கியுள்ளதைப் பார்க்கிறேன். வங்கியோ அல்லது பிற செயலிகளோ அல்ல, அரசாங்கத்தின் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான யுபிஐ செயல்படவில்லை'' என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
யுபிஐ என்றால் என்ன?
யுபிஐ என்பது டிஜிட்டல் முறையிலான உடனடி பணப்பரிமாற்ற சேவையாகும்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (NPCI) 2016-ல் வடிவமைத்து தொடங்கப்பட்டது.
விரைவான மற்றும் எளிதான பணப் பரிமாற்றங்கள், பணமில்லா பரிவர்த்தனைகள் இதன்மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.
ஒரு வங்கிக் கணக்குக்கு 4 யுபிஐ ஐடிகள் வரை உருவாக்கலாம். அவற்றை எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சில பயனர்களின் யுபிஐ, ஐடிகளை என்பிசிஐ ரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.