
வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
வெளிநாடுகளில் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான முதலீடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் அனுப்பும் நிதியளவு அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவில் தெரிவித்துள்ளது.
2024 - 25 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் 36 பில்லியன் டாலர் முதலீட்டை வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் அனுப்பியுள்ளது.
இது கடந்தாண்டைவிட 40 சதவிகிதம் அதிகம். நிதியாண்டு 24-ல் 25 பில்லியன் டாலரும், நிதியாண்டு 23-ல் 24.8 டாலர் முதலீடு மட்டுமே அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி, கடந்த 38 மாதங்களில் இல்லாத வகையில், இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும் 5.35 பில்லியன் டாலர் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு பரவியுள்ளது. அமெரிக்காவில் இந்தியா முதலீடு செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறைதான்.
வணிக நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர்வரை வெளிநாடுகளுக்கு அனுப்ப, நிறுவனங்களை வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கிறது.
இதையும் படிக்க: முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.