பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வயநாட்டில் பிரியங்கா: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார்.

News image

பிரியங்கா காந்தி

Updated On :27 மார்ச் 2025, 7:27 am

DIN

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கி சாலை வழியாக வயநாடு சென்றார். நாடாளுமன்றத்தில் வயநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா, புல்பள்ளியில் உள்ள ஸ்ரீ சீதா தேவி லவ குசா கோயிலில் பிரார்த்தனைகளுடன் தனது பயணத்தைத் தொடங்குவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பயணத் திட்டத்தின்படி, சுல்தான் பத்தேரியின் புல்பள்ளி கிராம பஞ்சாயத்தில் உள்ள புதிய கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தை அவர் திறந்துவைக்கிறார். பின்னர், அங்கடிசேரியில் ஸ்மார்ட் அங்கன்வாடி, அதிரட்டுக்குன்னுவில் பாசனத் திட்டம், சுல்தான் பத்தேரியின் இருளத்தில் உள்ள சோதனை அணை திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.

அதன்பின்னர், மதியம் 1.30 மணிக்கு மீனங்காடி, சுல்தான் பத்தேரியில் உள்ள கிராம பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் 'வனிதா சங்கமம்' நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு கல்பெட்டா டபிள்யூ.எம்.ஓ., முட்டில் 'ஒரு பள்ளி, ஒரு விளையாட்டு' திட்டத் துவக்க விழாவில் கலந்துகொள்கிறார்.

கல்பெட்டா எல்ஸ்டோன் தோட்டத்தில் முண்டக்காய்-சூரல்மாலா நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கான உத்தேச நகரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 5.15 மணிக்கு மானந்தவாடி வள்ளியூர்காவு கோயிலுக்குச் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.