உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் இன்டர் கல்லூரி உள்ளது. இங்கு 9ஆம் வகுப்பு பயின்று வந்தவர் ரியா பிரஜாபதி (17).

ரூ.800 கட்டணம் நிலுவையில் இருந்ததால், மாணவிக்கு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரியா சனிக்கிழமை வீடு திரும்பியதும், ​​ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com