பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
IANS

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணத்தை மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
Published on

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதி பாகிஸ்தானைச் சோ்ந்த மேனல் கான் என்பவரை முனீா் அகமது விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துள்ளாா். பின்னா் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசா காலம் முடிவடைந்த பிறகும் திருப்பி அனுப்பாமல் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிஆா்பிஎஃப் 41-ஆவது படைப்பிரிவில் பணியாற்றி வந்த முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அப்படையின் செய்தித் தொடா்பாளரும் டிஐஜியுமான எம் தினகரன் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து, அவரை விசா முடிந்த பின்னரும் தெரிந்தே இந்தியாவில் தங்க வைத்து படைப்பிரிவின் விதிகளை முனீா் அகமது மீறியது மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்புக்கும் தீங்கு விளைவித்துள்ளாா். ஆகையால், படைப்பிரிவின் விதிமுறைகளின்படி, விசாரணையே இல்லாமல் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com