ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

இந்தியர்களை மணந்துகொண்டு ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தானியர்கள் - பாஜக
ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் ரோந்து
ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் ரோந்து PTI
Updated on
1 min read

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது.

பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் எல்லை வழியாக வெளியேறிய நிலையில், 1,617 இந்தியா்கள் நாடு திரும்பினா்.

இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது.

இந்தநிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக, “அந்த மக்கள் இந்தியர்களை திருமணம் செய்திருந்தாலும் இங்கே வாழ அவர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் ஸ்லீப்பர் செல்களாகக் கூட இருக்கலாம். பாகிஸ்தான் உளவு முகமையான ‘ஐஎஸ்ஐ’யால் அவர்கள் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com