களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது.
களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது கடற்படையும் நேரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இந்திய ராணுவ வான்வெளி பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானின் 2 ட்ரோன்களை ஜம்மு - காஷ்மீரின் நெளசேரா பகுதியில் சுட்டு வீழ்த்தியது. நெளசேரா பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் குண்டு வீச்சை சமாளிப்பதற்காக அங்கு பீரங்கி மூலம் ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

எல்லையோரத்தில் தற்காப்பு தாக்குதலிலும், பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலையும் இந்திய ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் நுழைந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டது.

மக்களைத் தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அங்கு மக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

எல்லையிலுள்ள விடுதி மற்றும் உணவகத்தின் மீது பாகிஸ்தான் ராணும் வீசிய குண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

எல்லையில் தொடரும் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை (மே 8) மாலை ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இவற்றை நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மாலை முதல் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இதுவரை 8 ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு மீது ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் எதிரொலியால் இதுவரை 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தில்லியில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள ஊழியர்கள் மறு உத்தரவு வரும்வரை விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்

பாகிஸ்தான் உடனான போரால் ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது. எல்லையோரப் பகுதியில் வசித்துவரும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com