

ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 ட்ரோன்களை ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.
நெளஷேரா பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரை மணிநேரத்துக்கும் மேலாக கடுமையான பீரங்கி தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் விமானப் படையினர் 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு மக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.