நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதக சூழல்கள் உள்ளது.
6 இடங்களில் வெயில் சதம்: சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம், ஈரோடு - தலா 103.28, பரமத்திவேலூா் - 103.1, பாளையங்கோட்டை - 102.2, திருத்தணி - 101.48, திருச்சி - 101.3, தருமபுரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்தது.
மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல் மே 13-ஆம் தேதிவரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைநகரில் வெப்பத்தை தணித்த மழை
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



