முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடர்பாக...
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com