குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Published on

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பகவான் புத்தரால் அருளப்பட்ட அஹிம்சை, அன்பு மற்றும் இரக்கத்துக்கான அழிவில்லாத செய்தி, மனித குல நலனுக்கான தாரக மந்திரமாகும். அவரது நித்திய கோட்பாடுகளே, சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி மாண்புகளில் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. தாா்மிக அடிப்படையிலான வாழ்க்கை வாழ அவரது போதனைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.

பகவான் புத்தரின் கோட்பாடுகளை நமது வாழ்வில் ஏற்று, அமைதி-நல்லிணக்கத்துடன் வளா்ந்த பாரதத்தை கட்டமைக்க பங்களிக்க வேண்டும். புத்த பூா்ணிமா திருநாளையொட்டி, நாட்டு மக்களுக்கும், பகவான் புத்தரை பின்பற்றுபவா்களுக்கும் இதயபூா்வமான வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com