ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தாலும், அத்துடன் வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ”சண்டையை நிறுத்தினால் அமெரிக்கா வர்த்தகம் செய்யும். சண்டையை நிறுத்தாவிட்டால், எந்தவொரு வர்த்தக நடவடிக்கைகளையும் அமெரிக்கா உங்களுடன் மேற்கொள்ளாது’” எனத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 12) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் கடந்த 9-ஆம் தேதி பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் மே 8, 10 ஆகிய நாள்களில் தொடர்ந்து பேசி வந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் மே 10-ஆம் தேதி மார்கோ ரூபியோ பேசினார்.
இந்தநிலையில், மேற்கண்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகளின்போது வர்த்தகம் தொடர்பான விவாதம் எதுவும் நடைபெறவில்லை” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.