'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

குஜராத் புஜ் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் முன்னிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
Defence Minister Rajnath Singh
குஜராத் புஜ் விமானப்படைத் தளத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்.ANI
Published on
Updated on
1 min read

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்ற நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு விமானப்படை வீரர்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது,

"1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடுகிறேன். இன்று இங்கு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இரு படைகளும் இந்திய எல்லையை பாதுகாத்துள்ளீர்கள். உங்களின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்.

ஆபரேஷன் சிந்தூரின்போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது.

சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த ஒரு பெரும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. அந்த நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளது.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனி பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும்போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com