
நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் 24-ஆம் தேதி இந்தியா திரும்புவார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
ரவி சங்கா் பிரசாத் தலைமையிலான குழு சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சசி தரூா் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கும் கனிமொழி தலைமையிலான குழு ரஷியாவுக்கும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகளுக்கும் சுப்ரியா சுலே தலைமையிலான குழு ஓமன், கென்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் ஐரோப்பிய பயணமும் முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.