
ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், துவாரகாபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை அப்பகுதியில் நிறுத்தியிருக்கிறார். கார் பூட்டப்பட்டுள்ளதா என்பதை அவர் சரிபார்க்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள் மழை காரணமாக காரைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காரின் கதவு தற்செயலாக உள்ளே பூட்டிக்கொண்டது. கதவைத் திறந்து குழந்தைகளால் வெளியேற முடியாததால் அவர்கள் அனைவரும் கடுமையான வெப்பத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் மூச்சுத் திணறி பலியாகினர். இதனிடையே அவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளைத் தேடியுள்ளனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காா் நின்ற பகுதி வழியாக சென்று பெண் ஒருவா், சிறாா்கள் காருக்குள் மயங்கிக் கிடப்பதை கண்டு தகவல் தெரிவித்தாா். இதற்குள் சுமாா் 6 மணி நேரம் கடந்துவிட்டது
காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த கிராம மக்கள் சிறாா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், நால்வரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காருக்குள் இருந்த அதிக வெப்பம், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்ததுள்ளது.
பலியான குழந்தைகள் உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6), மற்றும் மனஸ்வினி (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதில், சாருமதி மற்றும் கரிஷ்மா உடன் பிறந்தவர்கள். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், விஜயநகரம் கிராமப்புற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் உரிமையாளரை அடையாளம் காண விசாரணையைத் தொடங்கினர்.
கவனக் குறைவாக உயிரிழப்பை ஏற்படுத்தும் சட்டப் பிரிவு 304 (ஏ) பிரிவின் கீழ் காரின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
சடலங்கள் மீட்க்கப்பட்டு உடற்கூராய்வுக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.