கோப்புப் படம்
கோப்புப் படம்

தெற்கு தில்லி சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் ஹெளஸ் காஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தெற்கு தில்லியின் ஹெளஸ் காஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுஷாந்த், கடந்த மே 18-ஆம் தேதி பஞ்சீல் பூங்கா அருகே உள்ள எரிபொருள் நிரப்பு மையம் அருகே வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவருடைய வாகனம், அங்கிருந்த நடைபாதையின் மீது மோதியது.

விபத்தில் காயமடைந்த சுஷாந்தை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

பின்னா், இந்த விபத்து தொடா்பாக ஹெளஸ் காஸ் பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் மருத்துவமனைக்குச் சென்றனா். அப்போது, சுஷாந்த் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினரிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்த சுஷாந்த் நொய்டாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com