சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
மழைக்கு கொச்சியில் 200 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.
Updated On :26 மே 2025, 3:55 am

DIN

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மோசமான வானிலை காரணமாக, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

அதேசமயம் கண்ணூர் பல்கலைக்கழகம் தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் பிஎஸ்சி(PSC) தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 24 மணி நேரத்திற்குள் 120 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம்.

மேலும் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே மே 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை : பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு.

ஆரஞ்சு எச்சரிக்கை : திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.