
2025-26-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மத்திய நீட்டித்துள்ளது.
2024-25-ஆம் ஆண்டுக்கான (ஏப்ரல் முதல் மாா்ச் வரை) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், வரி செலுத்துபவா்களுக்கு ஏதுவாகவும் இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், துல்லியமான தகவல்களைச் சோ்க்கவும் இந்தப் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கணினிகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் இந்த அவகாசம் தேவைப்படுகிறது.
இதேபோல், மே 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய டிடிஎஸ் எனும் வரிப் பிடித்தம் கணக்குகள் ஜூன் மாதத்தில் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அறிவிக்கை ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் வெளியாகும். ஆனால், நிகழாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கலான புதிய வருமான வரி மசோதா தயாரிப்பில் வருவாய்த் துறையினா் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் இந்த அறிவிக்கை வெளியாவதில் தாமதமானது.
வரிச் சலுகைகளை அளிக்கும் 80சி, 80ஜிஜி படிவங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும், ரூ.1.25 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படும் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் கிடைக்கும் லாபத்துக்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.