
சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலகத்துக்கு எடுத்துரைக்க மத்திய அரசின் முயற்சியால் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை 32 நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுக்கள் தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து வருகின்றன.
அந்த வகையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழு சிங்கப்பூர் சென்றடைந்துள்ளது.
அங்கு சிங்கப்பூர் வெளியுறவு மற்று உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் சிம் ஆனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இந்திய எம்.பி.க்கள்,
பஹல்காமில் நடைபெற்ற பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்,
’ஆபரேஷன் சிந்தூர்’,
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய இயல்புநிலைக் கொள்கை
ஆகியவற்றுக்குப் பிந்தைய நிகழ்வுகளில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்ததாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் இன்று(மே 27) பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.