அமிர்தசரஸில் வெடிபொருளை தவறுதலாக கையாண்ட பயங்கரவாதி பலி!

அமிர்தசரஸில் வெடிபொருள் விபத்தில் பலியான பயங்கரவாதி பற்றி...
அமிர்தசரஸில் வெடிபொருளை தவறுதலாக கையாண்ட பயங்கரவாதி பலி!
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் மர்ம பொருள் வெடித்ததில் பயங்கரவாதி பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் புறநகர் மாவட்டத்தில் காம்போ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நௌஷேரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடிவிபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மர்ம நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் பலியானதாகவும் பஞ்சாப் காவல்துறை மூத்த அதிகாரி சதீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

”வெடிவிபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார். அவர் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருளை மீட்பதற்காக வந்தபோது, தவறுதலாக கையாண்டதன் விளைவாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

எங்களுக்கு நிறைய தடயங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பாப்பர் கல்சா மற்றும் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பலியானவர் பாப்பர் கல்சாவின் உறுப்பினராக இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com