200MP கேமராவுடன் புதுவரவாக 3 மொபைல்கள்! எதை வாங்கலாம்?

200MP கேமராவுடன் புதுவரவாக வந்துள்ள 3 மொபைல்கள் பற்றி...
200MP கேமராவுடன் புதுவரவாக 3 மொபைல்கள்! எதை வாங்கலாம்?
Published on
Updated on
1 min read

200MP கேமராவுடன் மூன்று புதிய மொபைல்களை புதுவரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பம்சங்கள் விலை விவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.

அதிகமான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து ரசிப்பவராக இருந்தால் அவர்களுக்கெனவே 200 மெகா பிக்சல்களுடன் மூன்று புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. DSLR கேமராக்களின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில், மொபைல் போனிலேயே புகைப்படங்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகமான புகைப்படங்கள் எடுப்பவர் மட்டுமின்றி, சமூகவலைதளங்களில் அதிகமான நேரம் செலவிடுபவர், கேமிங்கில் ஆர்வமிக்கவர் என்றால் இந்த மூன்று போன்களும் அவர்களுக்கு அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா - Samsung Galaxy S25 Ultra

முதலாவதாக பார்க்கப்போவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், 200MP-யில் முதன்மை கேமராவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தெளிவாகவும் துல்லியமாகவும் படம் எடுக்க உதவும். அதேபோன்று டெலிபோட்டோ மற்றும் அல்ட்ரா வைடாக முறையே 50MP மற்றும் 10MP கேமராவும், செல்ஃபிக்கு 12MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 12 ஜிபி உள் நினைவகத்துடன் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை; ரூ.103,999-ல் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - Samsung Galaxy S24 Ultra

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் மலிவுவிலை பதிப்பான இந்த எஸ்24 எந்தவிதத்திலும் எஸ்25 -க்கு சலித்தது இல்லை என்ற வகையில் தனது செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

அதைப் போலவே 200MP-யில் முதன்மை கேமரா, செல்ஃபி கேமராக்கள், மற்ற கேமராக்கள், 5000 mAh பேட்டரி என ஒத்த வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அளவில் 6.8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.1,34,999 என கொடுக்கப்பட்டிருந்தாலும், 33 சதவிகித தள்ளுபடி விலையில் ரூ.89,989-க்கும் பெற்றுக் கொள்ளலாம்.

ரெட்மி நோட் 13 புரோ - Redmi Note 13 Pro

மிகக்குறைந்த விலையில் 200MP-யில் முதன்மை கேமராவுடன் ரூ.25,000-க்கு குறைவாக வாங்க விரும்புவர்களுக்கு இந்த மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த போன் குறைந்த விலையில் பிரீமியம் அனுபவத்தைத் தருகிறது.

6.67 அங்குலத் திரையுடன் 5000 mAh பேட்டரி திறனில் நாள் முழுவதும் நீடிக்கும் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.18,000-லிருந்து தொடங்கிறது.

இதையும் படிக்க: ரூ.32,000 தள்ளுபடி விலையுடன் சாம்சங் கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com