
புது தில்லி: பயிர்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், புது தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.