

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியாக 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
இதனிடையே உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி அதிகமாக உள்ளதாகவும் எனவே அதனைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் நீண்ட நாளாக கோரி வந்தனர்.
இந்த கேளிக்கை வரியால் குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக அரசிடமும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திரைப்படத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.