பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்குமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
கடற்படை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
கடற்படை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்X | Rajnath Singh
Published on
Updated on
1 min read

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத விளையாட்டு தற்போது நிறுத்தப்பட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை எச்சரிக்கிறேன். மேலும், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களையும் இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில், இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அதனை எதிர்கொள்ளும் அனைத்து வழிகளையும் இந்தியா மேற்கொள்ளும். பாகிஸ்தான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததையும் செய்வதற்கு இந்தியா தயங்காது. ஆகையால், அந்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை அவர்களே அழிப்பதுதான் அவர்களுக்கு நல்லது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பயிற்சி மட்டும்தான்.

இந்தியாவுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முயன்றால், இந்த முறை இந்திய கடற்படையும் களத்தில் இறங்கும். 1971 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையும் போரில் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் இந்திய கடற்படை சேர்க்கப்பட்டிருந்தால், இந்த முறை பாகிஸ்தான் நான்காகப் பிரிந்திருக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com